சினிமா

பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை கொரோனாவிலிருந்து காப்பாற்ற நடிகை பிரியங்கா சோப்ரா எடுத்த நடவடிக்கை..!

Summary:

Priyanka Chopra Collaborates With Activist Greta Thunberg to Help Children

உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல அமெரிக்க பாப் சிங்கர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது தனது கணவருடன் அமெரிக்காவில் வசித்துவருகிறார் ப்ரியங்கா சோப்ரா.

தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த பரல் மாதம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் படிப்பதற்கான உதவிகளை தாம் செய்வதாக ப்ரியங்கா சோப்ரா அறிவித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு உதவியை குழந்தைகளுக்காக தொடங்கியுள்ளார் ப்ரியங்கா.

பிரியங்கா யுனிசெப்பின் தூதராக இருந்து வரும் நிலையில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்குடன் ஒத்துழைப்பதாக தனது டிவிட்டர்  தெரிவித்தார். மேலும், உலகெங்கிலும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு கோவிட் -19 இன் விளைவைக் காண்பது மனதைக் கடினமாக்குகிறது.

அவர்கள் இப்போது உணவுப் பற்றாக்குறை, கஷ்டப்பட்ட சுகாதார அமைப்புகள், வன்முறை மற்றும் இழந்த கல்வி ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டும். நாம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு மக்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்யவேண்டும் என கூறியுள்ளார் ப்ரியங்கா.


Advertisement