அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
"கடற்கரையில் ப்ரியங்கா சோப்ராவின் கணவர் செய்த முகம் சுளிக்க வைக்கும் செயல்!"
2000ம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்று மிகவும் பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. இதையடுத்து ஹிந்தி திரைத்துறையில் அறிமுகமானார். 2002ஆம் ஆண்டு விஜய் நடித்த "தமிழன்" படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.

மேலும் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார். சமீபத்தில் இவர் அமெரிக்க பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் உலக அளவில் பிரபலமடைந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
இதையடுத்து வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ள பிரியங்கா மற்றும் நிக் ஜோன்ஸ் ஜோடி இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் மாறி மாறி பறந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்ட பிரியங்கா சோப்ரா இணையத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.

அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளன. ஒரு கடற்கரையில் பிரியங்கா சோப்ராவின் கணவர் செய்த முகம் சுளிக்க வைக்கும் செயலை, புகைப்படமாக பதிவிட்டுள்ளார்.