சினிமா

கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அந்த பழக்கம் மட்டும் விட்டு போகவில்லை! பிரியங்கா சோப்ரா குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

Summary:

Priyanka chopra

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்ற இவர் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற இவர் அங்கேயும் சாதித்து காட்டினார். அதன்பின்னர் பிரபல ஹாலிவுட் பாடகரும், நடிகருமான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து அதன்பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 

இந்நிலையில் தற்போது ஒரு பேட்டி ஒன்றில் அவரிடம் இன்னும் உங்களிடம் மாறாமல் இருக்கும் மிடில் கிளாஸ் பழக்கம் என்ன? என கேட்டுள்ளனர். அதற்கு அவர் நான் எல்லாவற்றுடனும் ஊறுகாய் சேர்த்து சாப்பிடுவேன். அது என்ன உணவாக இருந்தாலும் சரி என கூறியுள்ளார். 

மேலும் தள்ளுபடியில் பொருட்களை வாங்குவது பிடிக்கும் எனவே இந்த இரண்டு பழக்கமும் இன்னும் இருக்கிறது என கூறியுள்ளார். 


Advertisement