சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் பட நாயகி! யார் தெரியுமா?? உற்சாகத்தில் ரசிகர்கள்!!

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் பட நாயகி! யார் தெரியுமா?? உற்சாகத்தில் ரசிகர்கள்!!


Priyanga mohan join in rajini next movie

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நயன்தாராவை வைத்து 'கோலமாவு கோகிலா' என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பை பெற்றது.

 தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை வைத்து எந்த இயக்குனர் படம் எடுத்தாலும் அது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெறும். இந்தநிலையில் இளையதளபதி விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினிக்கு ஒரு கதை கூறியுள்ளார் என தெரியவந்துள்ளது.

Priyanga mohan

 மேலும்,  நெல்சன் மற்றும் ரஜினி கூட்டணியில் அமையும் இப்படத்தில் பிரபல நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது. நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.