சினிமா

தனது சுயசரிதையில் தளபதி விஜய் குறித்து போட்டுடைத்த நடிகை பிரியங்கா சோப்ரா!! என்ன எழுதியுள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

2020ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்றதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் பட

2020ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்றதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான தமிழன் என்ற படத்தில்  அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதனைத் தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர் அங்கு முன்னணி நடிகையாக கொடி கட்டி பறக்கிறார்.  மேலும் நடிகை ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்

இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா அன்பினிஷ்டு  என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தனது திரையுலக அனுபவங்கள் மற்றும் தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா அந்த புத்தகத்தில் தனது முதல் தமிழ் படமான தமிழன் மற்றும் தனது முதல் கதாநாயகனான விஜய் குறித்தும் எழுதியுள்ளார்.

பிரியங்கா சோப்ரா with vijayக்கான பட முடிவுகள்

அதில் அவர் , உலக அழகி பட்டம் வென்ற சில நாட்களிலேயே நான் தமிழன் என்ற தமிழ் படத்தில் நடித்தேன். எனது முதல் கதாநாயகன் தளபதி விஜய். அவரது பணிவு மற்றும் அவர் ரசிகர்களுடன் நட்பாக பழகுவது எனக்கு ஒரு நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் வெப்தொடரான குவாண்டிகோவின் ஷூட்டிங்கிற்காக நியூயார்க் சென்றிருந்தேன். அங்கு குவிந்த  ரசிகர்கள் என்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பினர். உடனே நான் எனது உணவு இடைவேளையின் போது ரசிகர்கள் அனைவருடனும்  நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.அது எனக்கு விஜய் கற்றுத் தந்த பாடம் என பெருமையாக கூறியுள்ளார்.


Advertisement