100 நாட்களாக ஐசியூவில் சிகிச்சை! முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா!!

100 நாட்களாக ஐசியூவில் சிகிச்சை! முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா!!


priyanga-chopra-shares-her-daughter-photo

பாலிவுட் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர்  கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் பிரியங்கா சோப்ரா பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வாடகைத் தாய் மூலம் தனது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில் முதன்முறையாக அவர் தனது மகனின் புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அதனுடன் அவர் மிகவும் உருக்கமாக, பிறந்து 100 நாட்களுக்கு மேல் ஐசியூவில் சிகிச்சை பெற்ற எங்களது குழந்தை தற்போது வீட்டிற்கு வந்துள்ளது. எங்களுக்கு கடந்த மாதங்களாக சவால்கள் நிறைந்ததாக இருந்தது. தற்போது எங்களது குழந்தை வீட்டிற்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தருணத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்களுக்கும், நர்சுகளுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அம்மா, அப்பாவாக எங்களது புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது. என்னை அம்மாவாக்கிய நிக் ஜோனாஸுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.