சினிமா

நடிகர் விஜய்யிடம் கற்றுக்கொண்ட பாடம் இதுதான்! தமிழன் நடிகை பெருமிதத்துடன் கூறியுள்ளதை பார்த்தீங்களா!!

Summary:

நடிகர் விஜய்யிடம் கற்றுக்கொண்ட பாடம் இதுதான்! தமிழன் நடிகை கூறியுள்ளதை பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் மஜீத் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. இவர் 2000-ம் ஆண்டு உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதனைத் தொடர்ந்து அவர் ஹிந்தியில் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

பின்னர் பாலிவுட்டில் தொடர்ந்து எக்கச்சக்கமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்த அவர் தற்போது இந்தியளவில் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார். மேலும் பிரியங்கா சோப்ரா வெப்தொடர், ஹாலிவுட் படங்களிலும் பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தன் வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது அவர் நடிகர் விஜய்யிடம் கற்றுக்கொண்ட பழக்கம் குறித்தும் பேசியுள்ளார். அவர் கூறியதாவது,  நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பணிவுடன் இருப்பார். அவர் ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிட்டால் வெளியே செல்ல மாட்டார். செட்டிலேயே அமர்ந்திருப்பார். அவரிடம் நான் கண்டு வியந்த அந்த பழக்கத்தை இப்போது வரை நானும் கடைபிடித்து வருகிறேன். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே, மிகவும் அரிதாகவே எனது கேரவனுக்கு செல்வேன். மற்றபடி எதை குறித்தாவது தெரிந்து கொள்வதற்காக படப்பிடிப்பு தளத்திலேயே சுற்றித் திரிவேன் என கூறியுள்ளார்.

 


Advertisement