சினிமா

அடேங்கப்பா.! ப்ரியங்கா சோப்ராவின் பிறந்தநாள் கேக்கின் விலை இவ்வளவா? வாயடைத்து போன ரசிகர்கள்!!

Summary:

priyanga chopra birthday cake price

2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 

இவர் கடந்த டிசம்பர் 1ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபநாட்களாக தனது காதல் கணவருடன் வெளிநாடுகளிலேயே சுற்றித்திரிந்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

இந்நிலையில்  நடிகை பிரியங்கா சோப்ரா  சமீபத்தில் தனது  37வது பிறந்தநாளை மியாமியில் சொகுசுக் கப்பல் ஒன்றில் கொண்டாடினார். அவருடன் அவரது கணவர் நிக் ஜோனஸ், தாய் மது சோப்ரா, தங்கை பிரநிதி சோப்ரா ஆகியோருடன் கேக் வெட்டி கொண்டாடினார். 

மேலும் அதற்காக 4 அடி உயரத்திற்கு 5 அடுக்குகள் கொண்ட கேக்கை நிக் ஜோனஸ் வாங்கியிருந்தார்.அந்த கேக்கின் விலை 5000 டாலர்கள். அதாவது இந்திய மதிப்பீட்டின் படி மூன்றரை லட்சம் ரூபாய் ஆகும். இந்த தகவல் தற்போது வைரலாக நிலையில் அதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement