சினிமா

விஜய் டிவியிலிருந்து விலக போகிறாரா பிரியங்கா! என்ன காரணம்! அவர் கூறியதை பார்த்தீங்களா!!

Summary:

விஜய் டிவியிலிருந்து விலக போறாரா பிரியங்கா! என்ன காரணம்! அவர் கூறியதை பார்த்தீங்களா!!

விஜய் டிவியில் ஏராளமான பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. சிரித்த முகத்துடன் மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

மேலும் பிரியங்கா விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு தனது சில செயல்களால் நெகட்டிவான விமர்சனங்களை சந்தித்தார். ஆனாலும் டாஸ்க்குகளை சிறப்பாக செய்து நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் மீண்டும் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

 தொகுப்பாளினி பிரியங்கா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி அதில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பிரியங்கா கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவை ஒரு மாதம் கழித்து தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில் கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடிய அவருக்கு ஏராளமான கிப்ட்டுகள் குவிந்தது. மேலும் அந்த வீடியோவில் பாலாவிடம் பிரியங்கா, எனக்கு 30 வயது ஆகிவிட்டது, அதனால் வயதானவர் போன்ற ஃபீல் வருகிறது. அதனால் நான் இத்துடன் தொலைக்காட்சியை விட்டுவிட்டு பிரேக் எடுக்கலாம் என இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதற்கு பாலா மைக்கை பிடித்தவர்கள் எல்லாம் ஆங்கர் ஆகிவிட முடியாது. மைக்கிற்கே பிடித்தவங்கதான் ஆங்கர். நீயே நினைத்தாலும் அது உன்னை விடாது என கூறியுள்ளார். 

 


Advertisement