வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
500 எபிசோடுகள்.. சன் டிவியில் விரைவில் முடிவுக்கு வரும் பிரபல தொடர்.! ரசிகர்கள் அதிர்ச்சி!!
அன்று முதல் இன்று வரை சன் டிவி தொடர்கள் என்றால் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். காலை தொடங்கி இரவு வரை வித்தியாசமான கதைக்களத்துடன், ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான தொடர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பல தொடர்களுக்கு ரசிகர்கள் அடிமையாக உள்ளனர்.
ஒரு எபிசோடை கூட தவறவிடாமல் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான தொடர்கள் 500,1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியுள்ளது. மேலும் தற்போது புது புது சீரியல்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மதியம் 1 மணியளவில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பிரபலமான தொடர் பிரியமான தோழி.
இந்த தொடர் 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பானது. இந்நிலையில் தற்போது பிரியமான தோழி தொடர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அந்த நேரத்தில் எந்த புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது எனவும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.