சினிமா

என்னது.. ஹீரோவாகும் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கிறாரா இந்த பிரபல இளம் நடிகை? உண்மைதானா? ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் முன்னணி காமெடி நடிகராகவும், பின்னர் சில படங்களில்

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் முன்னணி காமெடி நடிகராகவும், பின்னர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் வடிவேலு. ஒரு சில காரணங்களால் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது மீண்டும் நடிக்கவுள்ளார். 

அதாவது அவர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க உள்ளாராம். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க, அப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதற்கிடையில் இப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. 

மேலும் பிரியா பவானிசங்கரும் வடிவேலுவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ஷ்டக்கார பெண் என பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது பிரியா பவானி சங்கர் அப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை எனவும், ஆனால் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement