புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஜொலிக்கும் நட்சத்திரமாக இன்ஸ்டாவில் பளபளக்கும் பிரியா வாரியர்.. வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்.!
மலையாள நடிகையான பிரியா பிரகாஷ் வாரியர், 2018ம் வருடம் மலையாள இயக்குனர் ஓமர் லுலு இயக்கிய 'ஒரு அடார் லவ்' என்ற திரைப்படத்தின் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.
இந்தப் படத்தில் பிரியா வாரியர் ஒரு காட்சியில் அழகாக கண் புருவங்களை அசைத்து கண்ணடித்த அழகில், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் கனவுக்கன்னியாக மாறிப் போனார். இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டாலும், ஏனோ தோல்வியைத் தழுவியது.
ஆனாலும் இன்றுவரை பிரியா வாரியாருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டிலும் உண்டு. இவர் இதன்பிறகு எந்த திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.
இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா வாரியர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் அவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது ஒரு ஜொலிக்கும் ஆடையணிந்து கவர்ச்சியாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் படு வைரலாகி வருகின்றன.