வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
பனிமலைக்களுக்கு நடுவே பிரியா பவானி சங்கரின் ஜில் கூல் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மேயாத மான் என்னும் திரைப்படத்தின் மூலம் 2017 ஆம் ஆண்டு கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்த பிரியா பவானி சங்கர் கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, குருதி ஆட்டம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அருண் விஜயுடன் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் வெப் சீரிஸிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் வெளியாகியிருக்கும் அகிலன் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இது தவிர உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். எப்போதுமே படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களிலும் அவ்வப்போது அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களை என்கேஜ்டாக வைத்திருப்பவர்.
தற்போது இவர் தனது சிறிய ஓய்வு நேரத்தில் சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். திரைப்படங்களுக்கிடையே ஓய்விற்காக ஹிமாச்சல பிரதேஷ் சென்றுள்ள பிரியா பவானி சங்கர் அழகிய பனிமலைகளுக்கிடையே அமர்ந்து தேநீர் குடிப்பது போன்ற அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
Couldn’t ask for a better morning ❤️ pic.twitter.com/7fGeeQYG6I
— Priya BhavaniShankar (@priya_Bshankar) March 12, 2023