நடிகை ப்ரியா பவானி சங்கரா இது.! சிறுவயதில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படம்!!

நடிகை ப்ரியா பவானி சங்கரா இது.! சிறுவயதில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படம்!!priya-bhavani-shankar-small-age-photo-viral

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரியா பவானி சங்கர்.  இவருக்காகவே பல இளைஞர்களும் சீரியல் பார்க்க துவங்கினர். இவ்வாறு சின்னத்திரையில் புகழின் உச்சிக்கு சென்ற ப்ரியா பின்னர் டிவி சீரியலை விட்டுவிட்டு வெள்ளித்திரைக்கு தாவினார்.

மேலும் அவர் மேயாத மான் திரைப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

priyabavani shankar

அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், அதர்வாவிற்கு ஜோடியாக குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் ப்ரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இவ்வாறு தற்போது அவர் தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

priyabavani shankar