
நானும் அந்த மாதிரியான படங்களில் நடித்துள்ளேன்... ஓபனாக பேசிய பிரியா பவானி சங்கர்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதனையடுத்து தமிழ் சினிமாவில் மேயாதமான்
திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
மேயாதமான் படத்தை தொடர்ந்து கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா, ஓமணப் பெண்ணே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவரது கைவசம் தற்போது ஹாஸ்டல், பொம்மை பத்து தல,ருத்ரன், இந்தியன்-2, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், யானை, உள்ளிட்ட எக்கச்சக்கமான படங்கள் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் தப்பான படங்களிலும் நடித்துள்ளேன் அந்த படங்களும் வெளியாகி விட்டது என வெளிப்படையாக கூறியுள்ளார். அவர் ஓப்பனாக பேசியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பிரியா பவானி சங்கர் ஒரு சில சுமாரான ஸ்கிரிப்ட்டை தேர்வு செய்துள்ளதையே இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement