கமலுக்காக 80 வயது பாட்டியாக நடிக்க ஓகே சொன்ன பிரபல இளம் நடிகை!

கமலுக்காக 80 வயது பாட்டியாக நடிக்க ஓகே சொன்ன பிரபல இளம் நடிகை!


Priya bavani shanker indian2

2.0 வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் பிரமாண்ட இயக்குனர் சங்கர். இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் கமல் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே இந்தியன் படம் மாபெரும் வெற்றிபெற்றதால் இந்தியன் 2 படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங் போன்ற நடிகர், நடிகைகள் பலரும் சேர்ந்து நடிக்கவுள்ளனர். இந்நிலையில் தற்போது படத்தை பற்றிய புதிய தகவலை நடிகை பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

indian2

அதாவது இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடிகை சுகன்யா நடித்திருப்பார். அதேபோல் தற்போது வரும் இந்தியன் 2 பாகத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க பிரியா பவானி சங்கர் தேர்வாகியுள்ளார்.

இதனை பற்றி பிரியா கூறுகையில், பிரமாண்ட இயக்குனர் சங்கர் மற்றும் கமல் சாருடன் நடிப்பது என்பது பல நடிகர், நடிகைகளின் ஆசையாக இருக்கும். எனவே எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.