சினிமா

செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய போது நடிகை பிரியா பவானி சங்கரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Summary:

Priya bavani shanker get ₹360 salary for news reader

முதலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவ்வாறு சின்னத்திரையில் புகழின் உச்சிக்கு சென்ற பிரியா பின்னர் டிவி சீரியலை விட்டுவிட்டு வெள்ளித்திரைக்கு தாவினார்.

முதலில் நடிகர் வைபவுக்கு ஜோடியாக மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பிரியாவிடம் ரசிகர்கள் இணையத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த போது நீங்கள் வாங்கி சம்பளம் எவ்வளவு என கேள்வி எழுப்பியுள்ளனர்.அதற்கு பிரியா ₹360 சம்பளமாக பெற்றேன் என பதில் அளித்துள்ளார். 


Advertisement