வாவ்! செம க்யூட்! ரேஸ் பைக்கை ஓட்டி அசத்திய நடிகை பிரியா பவானி சங்கர்! தீயாய் பரவும் வீடியோ.Priya bavani shanker

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். அந்த சீரியலில் நடித்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து அவருக்கு வெள்ளிதிரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் வைபவ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Priya bavani shanker

இந்நிலையில் தற்போது ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது கூட நடிகர் கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரியா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில் பிரியா ஒரு ரேஸ் பைக்கை செம க்யூட்டாக ஓட்டி வரும் வீடியோ. அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும், அந்த வீடியோவை அதிகம் சேர் செய்து வருகின்றனர்.