சினிமா

எனக்கு சுத்தமா பிடிக்கலை! கோபத்துடன் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகை பிரியா பவானி சங்கர்! ஏன் தெரியுமா?

Summary:

Priya bavani shankar warning to fans

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரியா பவானி சங்கர்.  அதனை தொடர்ந்து சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு தாவிய அவர் மேயாத மான் திரைப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம்,  எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், அதர்வாவிற்கு ஜோடியாக குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார். 

மேலும் இந்தியன் 2 , மாபியா, களத்தில் சந்திப்போம்,  கசட தபற என படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் அவ்வபோது தனது ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் சமீபத்தில் சமூகப் பிரச்சினை தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து அவருடன் சண்டை போட்டுள்ளார் இந்நிலையில் கோபமடைந்த ப்ரியா பவானி சங்கரின் ரசிகர்கள் அந்தப் பெண்ணை கடுமையாக விளாசியுள்ளனர்.

 அதனைத் தொடர்ந்து இதுகுறித்து பிரியா பவானி சங்கர் வெளியிட்ட பதிவில், சமீபத்தில் நான் வெளியிட்ட பதிவிற்கு பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு நான் நாகரிகமான முறையில் பதிலளித்தேன். ஆனால் சிலர் அந்த பெண் மீது அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளீர்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு ஆதரவாக பேசுவதற்காக மற்றொருவரை இழிவாக பேசுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என  பதிவிட்டுள்ளார்.


Advertisement