ஏன் இப்படி?? அந்த உடையில் பாத் டப்பில் படுத்து பிரியா பவானி ஷங்கர் கொடுத்த போஸ்! வைரல் புகைப்படம்!!

ஏன் இப்படி?? அந்த உடையில் பாத் டப்பில் படுத்து பிரியா பவானி ஷங்கர் கொடுத்த போஸ்! வைரல் புகைப்படம்!!Priya bavani shankar photo viral

சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகள், சீரியல்களில் பங்கேற்று பின் வெள்ளித்திரைக்கு தாவி தற்போது மாபெரும் பிரபலமாக இருப்பவர்கள் ஏராளம். அவ்வாறு சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி,சீரியலில் நாயகியாக நடித்து பின் மேயாதமான் என்ற படத்தின் மூலம் வெள்ளிதிரையில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.

அண்மையில் அவரது நடிப்பில் வெளிவந்த குருதி ஆட்டம், யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் நடித்த அகிலன், பொம்மை, ருத்ரன் போன்ற படங்கள்  ரிலீசுக்கு தயாராகவுள்ளது. தொடர்ந்து பிரியா பவானி சங்கர் பத்துதல, இந்தியன் 2  போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். 

இவ்வாறு பிரபல நடிகையாக வலம் வரும் அவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது தனது போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது புடவையில் பாத் டப்பில் இருந்தவாறு போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.