அட! ப்ரியா பவானி சங்கரின் காதலர் இவர்தானா? முதன்முறையா வெளியான புகைப்படம்!

அட! ப்ரியா பவானி சங்கரின் காதலர் இவர்தானா? முதன்முறையா வெளியான புகைப்படம்!


Priya bavani shankar lover photo goes viral

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கி அதன்பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நாயகியாக நடித்தார் ப்ரியா பவனி ஷங்கர். இந்த சீரியல் மாபெரும் வெற்றிபெற இவரும் ஒரு காரணம்.

priya bavani shankar

இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இவருக்காகவே இவரது ரசிகர்கள் சீரியல் பார்க்க தொடங்கினர். இவரது புகழ் நாளுக்கு நாள் அதிகரிக்க, வெள்ளித்திரை பக்கம் சென்றார் ப்ரியா பவானி ஷங்கர். நடிகர் வைபவ் நடித்த மேயாத மான் என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ப்ரியா. தற்போது SJ சூர்யாவுடன் மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

priya bavani shankar

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹலோ சகோ என்று நிகழ்ச்சியில் SJ சூரியாவும், ப்ரியா பவானி சங்கரும் கலந்துகொண்டனர். அப்போது ஸ்ருதி ஹாசன் எஸ் ஜே சூரியவிடம், பிரியா பவானி சங்கருக்கும் யாரை அதிகம் பிடிக்கும் என்று கேட்டார். அதற்கு எஸ் ஜே சூர்யா, அவரோட பாய் ப்ரெண்டுதான் தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும். படப்பிடிப்பில் அவரது அப்பாவுடன் கூட அவர் அவ்வளவு நேரம் பேச மாட்டார். ஆனால், அவரது பாய் ப்ரெண்டுடன் தான் அதிகநேரம் பேசுவார் என கூறினார்.

priya bavani shankar

ஆனால், அவரது காதலர் யார்? புகைப்படம் இவை எதுவமே அவர் குறிப்பிடவில்லை. இந்நிலையில் பிரியா, அவருடைய பாய் ஃபிரண்ட் ராஜ் என்பவரின்  பிறந்தநாளை சமீபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடி உள்ளார்.  அதன் போட்டோக்களை வெளியிட்டு "என் வாழ்க்கையில் எப்போதும், எல்லாமும் நீயாக இருக்கிறாய்.  உன்னை பற்றி பெருமையாக சொல்லிக் கொள்வேன் நீ ஒரு சிறந்த மனிதன் என்று என்னுடைய வளர்ச்சிக்கு நீ தான் காரணம் என பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.