சினிமா

பயங்கர ஸ்லிம்மாக மாறிய நடிகை பிரியா பவானி சங்கர்! ஜிம் புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

Summary:

Priya bavani shankar latest gym workout photos

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நாயகியாக நடித்து அதன்மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் எத்தனையோ பேர் வெள்ளித்திரையில் கலக்கிவரும் நிலையில் அந்த வரிசையில் தற்போது ப்ரியா பவானி சங்கரும் இணைந்துள்ளார்.

நடிகர் வைபவுக்கு ஜோடியாக மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுத்த ப்ரியா அடுத்ததாக கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் SJ சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர் படத்தில் நடித்தார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் பிரியா பவானி சங்கர்.

இந்நிலையில் தனது உடற்பயிற்சி வீடியோ, புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவரும் இவர் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார் ப்ரியா பவானி சங்கர். இதோ அந்த புகைப்படம்.


Advertisement