இனி உயிரோட இருக்கிறவங்களுக்கும் அஞ்சலி! விமர்சித்தவருக்கு செம நக்கலாக பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்!!

இனி உயிரோட இருக்கிறவங்களுக்கும் அஞ்சலி! விமர்சித்தவருக்கு செம நக்கலாக பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்!!


priya-bavani-shankar-anwered-to-netisan-who-tease-her

கி.ராஜநாராயணன் மறைவிற்காக தான் இரங்கல் தெரிவித்ததை விமர்சித்த ரசிகருக்கு நடிகை பிரியா பவானி சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

முதுபெரும் தமிழ் எழுத்தாளர் மற்றும் சாகித்ய அகாடமி விருதை 
பெற்ற கி.ராஜநாராயணன் அவர்கள் தனது 98 வயதில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர். 

இந்த நிலையில் மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா போன்ற படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் பிரியா பவானிசங்கரும் தனது சமூக வலைதளபக்கத்தில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 
அவர் எழுதிய புத்தகங்களுடன் தொடர்புடைய தன் குழந்தை பருவ அனுபவங்களை பகிர்ந்து, எழுத்தாளர்கள் என்றும் மறைவதில்லை என்ற கேப்ஷனுடன் பதிவிட்டிருந்தார்.

priya bavani shankarஇந்த நிலையில் அதனை விமர்சிக்கும் வகையில் நெட்டிசன் ஒருவர், ஒருவர் உயிருடன் இருக்கும் போது விட்ருங்க. ஆனா செத்தவுடனே டயலாக் விட்றீங்க பாருங்க முடியல டா..
என பதிவிட்டிருந்தார். அதற்கு நடிகை பிரியா பவானி ஷங்கர், நாளைலேர்ந்து உயிரோட இருக்கறவங்களுக்கு அஞ்சலி செலுத்திடறோம்ங்க ஐயா.... என்று நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார்.