புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"என் அம்மாவை நான் இழக்க விரும்பவில்லை" மேடையில் அழுத பிரியா பவானி ஷங்கர்.?
சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்தவர் பிரியா பவானி ஷங்கர். இவர் பின்னர் "காதல் முதல் கல்யாணம் வரை" என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்துப் பிரபலமானார்.
இதையடுத்து "மேயாத மான்" படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர், தொடர்ந்து மான்ஸ்டர், ஓமணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் தற்போது டிமான்டி காலனி-2, இந்தியன்-2 படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் புற்றுநோய் மருத்துவமனை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ப்ரியா பவானி ஷங்கர், அங்கு தனது தாய் குறித்துப் பேசி கண் கலங்கினார். அதில், "என் அம்மாவிற்கு கேன்சர் இருப்பது தெரிய வந்துள்ளது.
அப்போது என்னையும் பரிசோதனை செய்துகொள்ளச் சொன்னார்கள். ஆரம்பத்திலேயே கண்டறிப்பட்டதால், விரைவில் சரிசெய்து விடுவோம். என் அம்மாவை நான் இழக்க விரும்பவில்லை. மருத்துவர்களை நம்புங்கள்" என்று மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார் பிரியா பவானி ஷங்கர்.