சினிமா

குளியல் டவலுடன், கவர்ச்சியாக பணமழையில் நனையும் நடிகை ப்ரியா ஆனந்த்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

Summary:

பிரியா ஆனந்த் பண மழையில் நனையும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வாமனன் படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். இதனை தொடர்ந்து இவர் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். ஆனால் சொல்லி கொள்ளும் அளவிற்கு அவருக்கு எந்த படமும் பெயர் பெற்று தரவில்லை. அதனை தொடந்து ப்ரியா ஆனந்த்  மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் கடந்த ஆண்டு ஆதித்ய வர்மா, எல்கேஜி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து ப்ரியா ஆனந்த் தற்போது சுமோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து சிம்பிள் மர்டர் என்ற வெப் சீரிஸில் நடித்து வரும் பிரியா ஆனந்த் அவ்வப்போது அதுகுறித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது குளியல் துண்டை கட்டிக்கொண்டு கழுத்தில் 2000 ரூபாய் மாலையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement