அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம்? பெண் யார் தெரியுமா?
இயக்குனர் கங்கை அமரனின் இரண்டாவது மகனும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி அமரன் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் உள்ளார். குறிப்பாக இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் அனைத்து திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றிவிடுவார்.

தற்போது 43 வயதாகும் பிரேம்ஜிக்கு தற்போது வரை திருமணமாகவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு கண்டிப்பாக திருமணம் நடந்து விடும் என தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரபல பாடகியும், பிரேம்ஜியின் தோழியுமான வினிதாவை அவர் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.