நடிகர் பிரேம்ஜிக்கு திருமணமா? வெளியான புகைப்படத்தால் வாழ்த்துக்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!premji going to got marriage

பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டு சினிமாவில் வளம் வருகிறார்.

இவர் வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களில்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் .எப்போதும் மிகவும் ஜாலியாக இருக்கும் பிரேம்ஜி, நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் மிகவும் வெளிப்படையாகவும் கலகலப்பாகவும் இருப்பார்.

premji

 இந்நிலையில் 40 வயதாகியும் திருமணம் ஆகாததால் அவரது பெற்றோர்களும், நண்பர்களும் நீண்ட காலமாக மிகவும் தீவிரமாக திருமணத்திற்கு பெண் தேடிவருகின்றனர்.

இந்நிலையில் பிரேம்ஜி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு தயாராக நிற்கும் புகைப்படத்துடன் கேம் ஓவர் என்று எழுதப்பட்ட டி.சர்ட்டை அணிந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பிரேம்ஜிக்கு பெண் கிடைத்து விட்டது அவர் திருமணத்திற்கு தயாராகிவிட்டார் என ரசிகர்கள் கமெண்டு போட்டு வருகிறார்கள்.