பெரும் சோகம்.! பிரசவத்திற்கு சென்றபோது நேர்ந்த பயங்கரம்.! கணவருடன் உடல் கருகி உயிரிழந்த கர்ப்பிணி பெண்!!pregnant-woman-dead-with-husband-in-car-burning-at-kera

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் குட்டியாட்டூரைச் சேர்ந்த ரீஷா என்ற 26 வயது பெண் நிறைமாத கர்ப்பமாக இருந்துள்ளார். அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் அவரை அவரது கணவர் பிரஜித் காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மேலும் அப்பொழுது அவர்களுடன் உறவினர்கள் நான்கு பேரும் காரில் சென்றுள்ளனர். இந்த நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் காரில் பின்பக்கம் அமர்ந்திருந்தவர்கள் கதவை திறந்து துரிதமாக தப்பித்துக் கொண்டனர். ஆனால் காரின் முன்பக்க கதவை திறக்க முடியாததால் ரீஷா மற்றும் பிரஜித் ஆகியோரால் வெளியே வர முடியவில்லை.

pregnant woman

இதற்கிடையே காரில் அதிகளவில் தீப்பற்றி எரிய துவங்கியுள்ளது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை முழுவதுமாக அணைத்து மீட்டபோது கர்ப்பிணி ரீஷா மற்றும் பிரஜித் உடல் கருகியநிலையில் இறந்து கிடந்துள்ளனர். அவர்களது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.