13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
தங்கலான் படத்தில் பெண்களுக்கு நேர்ந்த அவலம்.. உண்மையை உடைத்த நடிகை!
தங்கலான்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் பா ரஞ்சித். தற்போது இவர் விக்ரமை வைத்து தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி, முத்துக்குமார், ப்ரீத்தி கரண் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற இந்த படத்தை ஸ்டூடியோ கிரின்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் கோலார் தங்க சுரங்கத்தில் ஆதிவாசி மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அட.. நடிகர் விக்ரமின் தந்தை இந்த பிரபல நடிகரா?? யார்னு பார்த்தீங்களா!!
அரைகுறை ஆடையில் படப்பிடிப்பு
இந்த நிலையில் ப்ரீத்தி கரண் தங்கலான் படத்தில் அனுபவங்களை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து பேசி அவர், தங்கலான் பீரியட் படம் என்பதால் உள்ளாடை அணியாமல் சேலை மட்டுமே அணிந்து நடிக்க வேண்டும் என கூறினர். முதலில் ஸ்டுடியோவில் சிலர் மட்டுமே இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. ஜாலியாக போட்டோ சூட்டுக்கு போஸ் கொடுத்தேன்
ஆனால் படப்பிடிப்புக்கு சென்றதும் வெட்ட வெளியில், உள்ளாடை அணியாமல் வெறும் சேலை மட்டுமே கட்டிக்கொண்டு நடிக்கும் போது தான் ஒரு மாதிரி இருந்தது. மற்றொரு பக்கம் ஆண்கள் கோவணம் மட்டுமே கட்டிக்கொண்டு ஆதிவாசிகளாக நடித்தனர். இதுவரை இதுபோன்ற படங்களில் நான் நடித்ததில்லை. தங்கலான் படத்தில் நடித்த அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய்யுடன் 4வது முறையாக இணையும் பிரபல நடிகை.. உற்சாகத்தில் ரசிகர்கள்!