கொரோனா டெஸ்ட் ராணியான பிரபல நடிகை! எத்தனை முறை கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளார் பார்த்தீர்களா! செம ஷாக்கான ரசிகர்கள்!



Preethi jinda take corono test 20 time

பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரீத்தி ஜிந்தா. இந்நிலையில் 13வது ஐபிஎல் போட்டிகள் அபுதாபியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் நிர்வாகியான பிரீத்தி ஜிந்தா ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்கு சென்று தனது அணியை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் பிரீத்தி ஜிந்தா இதுவரை 20 முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.அதனால் அவர் கொரோனா பரிசோதனைகளின் ராணி என அழைக்கப்படுகிறார்.  இந்த நிலையில் ப்ரீத்தி ஜிந்தா கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் குறித்த தனது அனுபவங்களை நெட்டிசன்களுடன் பகிர்ந்துள்ளார்.

preethi jintha

அப்போது அவர் நான் துபாயில் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டேன். இங்கு  நான்கு நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அங்கு பஞ்சாப் அணிக்கெனவே  கொடுக்கப்பட்டிருக்கும் உணவகம், ஜிம், மைதானம், கார் போன்றவற்றையே பயன்படுத்த வேண்டும். உணவு வெளியிலிருந்து வரக்கூடாது.வெளியாட்கள் யாருடனும் பேசக்கூடாது. ஆனாலும் இந்த சூழ்நிலையிலும், கொரோனாவிற்கு மத்தியிலும் ஐபிஎல் நடத்தப்படுகிறது.  இதற்கு பிசிசிஐ மற்றும் மருத்துவ குழுவிற்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.