தனுஷின் பர்த்டே ஸ்பெஷல்.! இதுவரை யாரும் பார்த்திராத சூப்பரான வீடியோவை பகிர்ந்த நடிகர் பிரசன்னா!! இதோ..

தனுஷின் பர்த்டே ஸ்பெஷல்.! இதுவரை யாரும் பார்த்திராத சூப்பரான வீடியோவை பகிர்ந்த நடிகர் பிரசன்னா!! இதோ..



prasanna shares thanush playing piano video

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் தற்போது தெலுங்கு, ஹிந்தி என சினிமா துறையையே கலக்கி வருகிறார். அவரது கைவசம் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் போன்ற படங்கள் உள்ளன. 

மேலும் தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' என்ற படத்திலும் நடித்துள்ளார்.  ஹாலிவுட்டில் அவர் நடித்த தி கிரே மேன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

இந்த நிலையில் நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவரது அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பகிர்ந்து வாழ்த்துக் கூறி வந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் பிரசன்னா இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் தனுஷின் வீடியோவை பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார். அதில் தனுஷ் அசத்தலாக பியானோ வாசித்துள்ளார். அது வைரலாகி வருகிறது.