வில்லனாகக் களமிறங்கும் பிரபல ஹீரோ.. யார் தெரியுமா.?

வில்லனாகக் களமிறங்கும் பிரபல ஹீரோ.. யார் தெரியுமா.?



Prasana acting in villan character

மணிரத்னம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான "பைவ் ஸ்டார்" படத்தில் ஐந்து பேரில் ஒருவராக அறிமுகமானார் பிரசன்னா. முதல் படத்திலேயே மக்களின் மனம் கவர்ந்த நடிகரான இவர், தொடர்ந்து அழகிய தீயே, சீனா தானா, சாது மிரண்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Prasanna

தொடர்ந்து கண்ணும் கண்ணும், மஞ்சள் வெயில், அச்சமுண்டு அச்சமுண்டு, முரண், சென்னையில் ஒரு நாள், கல்யாண சமையல்சாதம், புலி வால், நேற்று இன்று என பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் பிரசன்னா.

பிரசன்னா தனது நடிப்பின் அடுத்த கட்டமாக பவர் பாண்டி, நிபுணன், துப்பறிவாளன், கண்ணை நம்பாதே உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராகவும், திருட்டுப்பயலே 2வில் வில்லனாகவும் நடித்து மிரட்டினார். முன்னதாக 2000ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியானது "அஞ்சாதே" திரைப்படம்.

Prasanna

நரேன் கதாநாயகனாக நடித்திருந்த படத்தில் பிரசன்னா வில்லனாக அறிமுகமாகி நடித்து மிரட்டியிருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாகவும், அதிலும் பிரசன்னா தான் வில்லனாக மிரட்டப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.