தனது இரட்டைக்குழந்தைகளின் அழகிய புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட சின்னத்தம்பி ப்ரஜின்.!

தனது இரட்டைக்குழந்தைகளின் அழகிய புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட சின்னத்தம்பி ப்ரஜின்.!


prajin post twin girl baby photo

தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இது ஒரு காதல் கதை, காதலிக்க நேரமில்லை என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகர் ப்ரஜின். அதனை தொடர்ந்து அவர் பல சீரியல்களிலும்,  படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் சின்னத்தம்பி சீரியலில் நடித்து வருகிறார்.

இவருக்கும் மலையாள ஆங்கரான சாண்ட்ராவுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மேலும் இவரும் சில சீரியல்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் சின்னத்திரையில்  பிரபலமான ஜோடியாக உள்ளனர்.

prajin
இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனநிலையில் சான்ட்ரா கர்ப்பமாக உள்ளார் என காதலர் தினத்தை முன்னிட்டு  ப்ரஜின் தெரிவித்திருந்தார் . இதனை தொடர்ந்து சமீபத்தில் அவர்களுக்கு இரட்டை பெண்குழந்தைகள் பிறந்தது.

இந்நிலையில் தற்போது இரண்டு குழந்தைகளின் காலில் சாண்ட்ரா-ப்ரஜன் என பெயர் உள்ள மோதிரம் அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை ப்ரஜின் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.