என்னை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பினால்.. பிரதீப் போட்ட 2 அதிரடி கண்டிஷன்.! வைரலாகும் ஷாக் பதிவு!!

என்னை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பினால்.. பிரதீப் போட்ட 2 அதிரடி கண்டிஷன்.! வைரலாகும் ஷாக் பதிவு!!



pradeep-condition-to-enter-again-to-bigboss-house

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 7. கமல் தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரதீப் ஆண்டனி. பரபரப்பு போட்டியாளராக திகழ்ந்து வந்த. அவர் மீது மோசமாக பேசுகிறார், தூங்கவே பயமாக இருக்கிறது, டபுள் மீனிங் பேசுகிறார் என பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தொகுப்பாளரான உலகநாயகன் கமல், பெண்களின் பாதுகாப்பு கருதி அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார். ஆனால் அவர் வெளியேற்றப்பட்டது அநியாயம் என பிக்பாஸ் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். நடிகர் கமல் தீர விசாரிக்காமல் அவரை வெளியேற்றிவிட்டதாகவும், மீண்டும் பிரதீப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் வரவழைக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதீப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், என்னை பிக்பாஸ் 7 வீட்டிற்குள் அனுப்ப நினைத்தால் எனக்கு 2 ரெட் கார்டு வேண்டும். எனக்கு எதிராக சதி செய்த 2 பேரை வெளியேற்ற வேண்டும், மேலும் நான் 7வது வாரத்தின் கேப்டனாக வேண்டும் என பதிவு செய்துள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.