இது மட்டும் நடந்தால், லாஸ்லியாவிடம் அறைவாங்கவும் நான் தயார்!! பிரபல நடிகரின் அதிரடி பதிவால் அதிர்ச்சி!!Pradeep antony tweet about losliya win

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாகவும்,  பரபரப்பாகவும் இன்றுடன் 100வது நாளை கடந்துள்ளது. மேலும் 16 போட்டியாளர்கள் களமிறங்கிய இந்த பிக்பாஸ் வீட்டில் தற்பொழுது ஷெரின், லாஸ்லியா, முகேன்,  சாண்டி என நான்கு பேர் மட்டுமே இறுதி நிலையில் உள்ளனர். 
இந்நிலையில் அனைத்து  போட்டியாளர்களும் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கும் நிலையில்,  பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் 16  போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் சரவணன் மீனாட்சி புகழ் கவின். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து அபிராமி,சாக்ஷி, லாஸ்லியா என அனைவரிடம் காதல் சர்ச்சையில் சிக்கினார். மேலும் இதனால் மக்கள் மத்தியில்  கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானார். இருப்பினும் அவர் லாஸ்லியாவிடம் நெருக்கமாகவே இருந்து வந்தார். 

losliya

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் 5 லட்சம் பணத்தை கொடுத்து, அதனை எடுத்துக் கொண்டு  யாரேனும் வெளியேற விரும்புகிறீர்களா என கேட்டுள்ளார். அப்போது கவின்  தான்  வெளியேற விரும்புவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் போட்டியாளர்கள் சோகத்தில் மூழ்கினர். 

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது கவின் லாஸ்லியாவிடம் நெருக்கமாக பழகி வந்ததாலும், தான் வந்த நோக்கத்தை மறந்து இருந்ததாலும்  அவரது நண்பரும் நடிகருமான பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றபோது கவினை கண்டித்து கன்னத்தில் அறைந்தார். மேலும் நீ வெற்றி பெற்றால் அப்பொழுது மேடையில் உன்னிடம் நான் இந்த அறையை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் பிரதீப் ஆண்டனி லாஸ்லியாவை நீங்கள் வெற்றி பெற செய்தால் கவினுக்கு பதிலாக லாஸ்லியாவிடம் அறை வாங்க நான் தயார் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.