தாடி, மீசையுடன் அப்பாவை போலவே இருக்கும் நடிகர் பிரபுதேவாவின் மகன்! மறைந்த நடிகரிடம் ஆசி வாங்கும் புகைப்படம்!!

தாடி, மீசையுடன் அப்பாவை போலவே இருக்கும் நடிகர் பிரபுதேவாவின் மகன்! வைரல் புகைப்படம்!!


prabudeva-son-photo-viral

தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்குபவர் நடிகர் பிரபுதேவா. இவரது நடனத்திற்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. Q இவரை மைக்கேல் ஜாக்சன் எனவும் ரசிகர்கள் செல்லமாக அழைப்பர்.

மேலும் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த இந்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் மை டியர் பூதம். மேலும் அவரது கைவசம் யுங் மங் சங், பகீரா, ஊமை விழிகள், முசாசி, ஃப்ளாஷ் பேக், பொய்க்கால் குதிரை, ரெக்லா  போன்ற படங்கள் உள்ளன.

prabudeva

நடிகர் பிரபு தேவாவிற்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மறைந்த நடிகர் பாண்டுவிடம் பிரபுதேவா மகன் ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். அந்தப் புகைப்படத்தில் பிரபுதேவாவின் மகன் தாடி, மீசையெல்லாம் வைத்து பார்ப்பதற்கு தனது அப்பாவை போலவே உள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

prabudeva