சலார் படத்திற்காக மொத்த பட்ஜெட்டில் கால்பங்கை சம்பளமாக பெற்ற பிரபாஸ்.! அப்படி எவ்வளவு தான் சம்பளம் வாங்கியிருப்பார்.?PrabhasgotfootballasasalaryforthefilmSalaarHowmuchwouldhehavebeenpaidlikethat

பாகுபலி திரைப்படத்தில் நடித்த பிரபாஸ் அந்த திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை பல மடங்காக அதிகரித்தார். இவர் பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள் தான் என்று கூறப்படுகிறது. ஆனாலும் அனைத்து திரைப்படங்களுமே தோல்வியை சந்தித்தது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ஆதிபுருஷ் திரைப்படமும் ரசிகர்களிடையே சொல்லிக் கொள்ளுமளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தான், நடிகர் பிரபாஸுக்கு மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது சலார் திரைப்படம்.salaar

இந்த திரைப்படத்தில் இவருக்கு 100 கோடி ரூபாய் வரையில் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், இந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 400 கோடி தான். அப்படி பார்த்தால் ஒட்டுமொத்த பட்ஜெட்டின் கால் பங்கை இவருக்கு சம்பளமாக மட்டுமே கொடுத்திருக்கிறது படக்குழு.

salaar

இந்தத் திரைப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அதோடு கே.ஜி.எப் திரைப்பட கதைக்களத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.. அதேபோல கே. ஜி.எஃப் திரைப்படத்தில் ராக்கி பாய்க்கு பில்டப் கொடுத்த அளவிற்கு இந்த திரைப்படத்திலும் பிரபாசுக்கு பில்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் சுகுமாரன், பிரித்விராஜ், சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.