சினிமா

வீட்டிலேயே பயிற்சி! கொரோனா அச்சுறுத்தலால் பிரபாஸ் போட்ட திட்டம்! எல்லாம் இந்த படத்திற்காகத்தானா!!

Summary:

Prabhas learn archery for adhipurush movie at home

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பாகுபலி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் உலகளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகர் பிரபாஸ்.  இவர் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.  

இதனை தொடர்ந்து பிரபாஸ் தன்ஹாஜி இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பூஷண் குமார் தயாரிக்கவுள்ளார்.  3டி தொழில்நுட்பத்தில் பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த திரைப்படம் இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 

மேலும் இப்படம் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகவுள்ளதாகவும், இதில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ராமர் வில்வித்தையில் சிறந்தவர் என்பதால் படத்தில் வரும் காட்சிகளை மிகவும் பொருத்தமாக செய்யவேண்டுமென பிரபாஸ் வில்வித்தை பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் தற்போது கொரானோ அச்சுறுத்தல் இருப்பதால் பிரபாஸ் வீட்டிலேயே வில்வித்தை பயிற்சி எடுக்க  திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக வீட்டிலேயே தனி பயிற்சிக்கூடம் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தப் பணிகள் முடிவடைந்ததும் பிரபாஸ் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட உள்ளாராம்.


Advertisement