சினிமா

ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல சன் டிவி சீரியல் நடிகைக்கு நெஞ்சுவலி! தற்போதைய நிலை என்ன! ஷாக் தகவல்!!

Summary:

சன் டிவி பூவே உனக்காக சீரியல் நடிகை ஆமனிக்கு படப்பிடிப்பில் இருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை  பெற்ற தொடர் பூவே உனக்காக. இந்த சீரியலில் ஹீரோயின் அம்மாவாக செளந்திரவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தெலுங்கு நடிகை ஆமனி.

இவர் முரளி ஹீரோவாக நடித்த புதிய காற்று என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல  மொழிகளிலும் நாகார்ஜுனா, நந்தமுரி பாலகிருஷ்ணா, ஜகபதி பாபு, கமல்ஹாசன், விஜயகாந்த், மம்முட்டி என ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

பிரபல சீரியல் நடிகைக்கு நெஞ்சுவலி... மருத்துவமனையில் அனுமதி... - TTN Cinema

இந்நிலையில் ஆமனி தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் படக்குழுவினர் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பரிசோதனைக்கு பின்னர், கவலைப்பட தேவையில்லை என மருத்துவர்கள் உறுதியாக கூறிய நிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 


Advertisement