சினிமா

போலீசார்கள் மத்தியில் சூப்பர் சிங்கர் பூவையார்! செம்ம மாஸாக என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் மற்றும் திறமைகளை ஊக்

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் மற்றும் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ரியாலிட்டி ஷோக்கள் போன்றவை ஒளிபரப்பாகி வருகிறது. இவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பாடகர்கள் திரைத்துறைக்கு வந்துள்ளனர்.

இவ்வாறு சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கப்பீஸ் என்ற செல்லப் பெயருடன் வலம் வந்து ரசிகர்கள் மனதை பெருமளவில் கவர்ந்தவர் பூவையார். இவர் பெருமளவில் பிரபலமாகி தமிழ்சினிமாவில் பாடல்களை பாடியுள்ளார். மேலும் அண்மையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் பூவையார் காவல் அதிகாரிகள் சிலருக்கு மத்தியில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் இடம்பெற்ற ஜித்து ஜில்லாடி பாடலை பாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, தீயாய் பரவி வருகிறது.


Advertisement