சினிமா

நம்ம பூவையாரை பார்த்து நடிகர் விஜய் இப்படி சொல்லிட்டாரா? இனி ஒரே ஜாலிதான்.!

Summary:

poovaiyar say about first meeting with vijay

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் 6. இதில் தனது கானா பாடல்களாலும், கலகலப்பான பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தவர் போட்டியாளர்களில் ஒருவரான பூவையார்.

 இவர் தற்பொழுது அட்லி மற்றும் விஜய் மூன்றாம் முறையாக  கூட்டணியில் இணைந்து உருவாகி வரும் விஜய் 63 படத்திலும் நடித்து வருகிறார்.இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவுற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் போது விஜய்யை சந்தித்த அனுபவம் குறித்து பூவையார் தனியார் தொலைக்காட்சியில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

அதில் அவர் விஜய் தன்னை முதலில் பார்த்தபோது நீ நல்லா பாடுற, அதைவிட நல்லாவே எல்லோரையும் கலாய்க்கிற. எப்பவும் இப்படியே போனா வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்துக்கு வருவீங்க என்று விஜய் கூறியதாக மிகவும் உற்சாகத்துடன் கூறியுள்ளார்.

 


Advertisement