தளபதி 63; விஜய்யின் படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்! யார் தெரியுமா?

தளபதி 63; விஜய்யின் படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்! யார் தெரியுமா?



poovaiyar-joins-thalapathi-63-movie

சர்க்கார் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார் விஜய். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து தளபதி 63 படத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். கடைசி இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து தளபதி 63 படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

தளபதி 63 படம் விளையாட்டை மையமாக கொண்ட படம் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது, மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் ஒருசில முக்கிய பிரபலங்கள் தளபதி 63 படத்தில் நடிக்கின்றனர்.

Thalapathi 63

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகிவருபவர் சூப்பர் சிங்கர் புகழ் பூவையார். தனது கானா பாடல்கள் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பூவையார் தளபதி 63 படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாகவும், மேலும் படத்தில் ஒரு பாடல் அவர் பாடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.