புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
திருமண அறிவிப்பை வெளியிட்ட நடிகை பூர்ணா! அட..மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதனைத் தொடர்ந்து அவர் ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், கந்தக்கோட்டை, துரோகி தகராறு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சூர்யா நடித்த காப்பான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம், கன்னடம் சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவான ‘பிசாசு 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் நடிகை பூர்ணா தற்போது அதிகாரப்பூர்வமாக தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 7பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் என் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்கிறேன் என பதிவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.