சினிமா

ஆரம்பத்தில் நானும் தப்பு பண்ணிருக்கேன்! ஆனா இப்போ.. தன் சினிமா அனுபவத்தை ஓப்பனாக பகிர்ந்த நடிகை பூர்ணா!

Summary:

ஆரம்பத்தில் நானும் தப்பு பண்ணிருக்கேன்! ஆனா இப்போ.. தன் சினிமா அனுபவத்தை ஓப்பனாக பகிர்ந்த நடிகை பூர்ணா!

தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் நடிகை பூர்ணா. அதனைத் தொடர்ந்து அவர்  அர்ஜுனன் காதலி, கொடைக்கானல், துரோகி, ஆடு புலி, சகல கலா வல்லவன் என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது அவரது கைவசம் தமிழில் படம் பேசும், பிசாசு 2, அம்மாயி போன்ற படங்கள் உள்ளன. 

இவர் கேரளாவில் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி மீண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்  சமீபத்தில் பேட்டி ஒன்றில்  பூர்ணா தனது சினிமா அனுபவங்கள் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், பிரபலங்கள் ரசிகர்கள் கூறும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்கருத்துகள் இரண்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் எனது ரசிகர்கள் கூறி நெகட்டிவான கமெண்ட்டுகளை ஏற்றுக்கொண்டு நிறைய மாற்றிக் கொண்டுள்ளேன். 

நான் ஹீரோயினாக மட்டும் நடிக்கவேண்டும் என நினைத்ததில்லை. ஒரு சில காட்சிகளே நடித்தாலும் என் நடிப்புத் திறமையை காட்டும் கதாபாத்திரமாக இருத்தல் வேண்டும். சினிமா துறைக்கு தனியாக வந்து இத்தனை ஆண்டுகளாக நடித்து வருகிறேன். எனக்கு இந்த ஆண்டு முதல் நல்ல கதாபாத்திரங்கள் வருகிறது. ஆரம்பத்தில் நானும் சில தவறுகளைச் செய்தேன்.  ஆனால் தற்போது மிகவும் ஜாக்கிரதையாக நல்ல கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.


Advertisement