இது போதுமா?? தீயாய் பரவிய அந்த வதந்தி! நெருக்கமாக ஒற்றை புகைப்படத்தால் முற்றுப்புள்ளி வைத்த நடிகை பூர்ணா!!

இது போதுமா?? தீயாய் பரவிய அந்த வதந்தி! நெருக்கமாக ஒற்றை புகைப்படத்தால் முற்றுப்புள்ளி வைத்த நடிகை பூர்ணா!!


poorna-end-the-marriage-stopped-rumour-with-one-photo

தமிழில் நடிகர் பரத்துடன் இணைந்து முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி இருந்தவர் நடிகை பூர்ணா. அதனைத் தொடர்ந்து தமிழில் அவர் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, சவரக்கத்தி,கொடி வீரன், காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை பூர்ணாவுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்தப் புகைப்படங்களை, குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், எனது அடுத்த வாழ்க்கை பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன் எனக்கூறி பூர்ணா சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பூர்ணாவின் திருமணம் நின்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியுள்ளது. மேலும் இதுகுறித்து பூர்ணாவிடமும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் பூர்ணா தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, எப்போதும் என்னுடையவர் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் திருமணம் நின்று விட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.