சினிமா

முதல் மூன்று தடவை அழைத்தார்கள்! ஆனால்.. ஷாக் கொடுத்து நடிகை பூமிகா என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசி

தமிழ் சினிமாவில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை பூமிகா. அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றார்.

மேலும் அவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பஞ்சாப் என பல மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் நடிகை பூமிகா பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கை,  பிஸினஸ் என செட்டிலாகினார். மேலும் நடிகை பூமிகா சில திரைப்படங்களில் தற்போது துணை முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

 இந்த நிலையில் அவர் ஹிந்தியில் விரைவில் தொடங்கப்படவுள்ள பிக்பாஸ் சீசன் 15ல் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில் அது உண்மையில்லை. சீசன் 1, 2,3 மற்றும் அதற்கு பிறகும் பலமுறை என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க என்னிடம் பேசப்படவில்லை. கேட்டாலும் நான் ஒப்பு் கொள்ள மாட்டேன். நான் கேமராவிற்கு முன்பு நடிக்கக் கூடியவள்தான். ஆனால் 24 மணி நேரமும் கேமராக்கள் என்னை கண்காணிப்பதை நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.


Advertisement