ஓ.. உங்க பிட்னஸ்க்கு இதுதான் காரணமோ! குனிந்து நிமிந்து ஒர்க்அவுட் செய்யும் பீஸ்ட் நடிகை! வைரலாகும் வீடியோ!!

ஓ.. உங்க பிட்னஸ்க்கு இதுதான் காரணமோ! குனிந்து நிமிந்து ஒர்க்அவுட் செய்யும் பீஸ்ட் நடிகை! வைரலாகும் வீடியோ!!


pooja-hegde-workout-video-viral

தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் எதுவும் அமையாத நிலையில் அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.  

பூஜா ஹெக்டே தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீஸாவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அவர் பிரபாஸுடன் ராதே ஷ்யாம் மற்றும் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது தான் ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.