மின்மினியாய் மின்னும் விளக்குகளில் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே.. தீயாய் பரவும் புகைப்படம்.!?

மின்மினியாய் மின்னும் விளக்குகளில் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே.. தீயாய் பரவும் புகைப்படம்.!?


pooja-hegde-traditional-photoshoots-at-bright-lights

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் பூஜாஹெக்டே. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் முதன்முதலில் ஜீவா நடிப்பில் வெளியான 'முகமூடி' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.

Pooja hegde

மேலும் தமிழில் பூஜா ஹெக்டே நடித்த திரைப்படங்கள் தொடர் தோல்வி அடைந்ததால் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தெலுங்கில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவான நடிகையாக இருந்து வரும் பூஜா ஹெக்டே, அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். இதன்படி தற்போது இவர் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pooja hegde

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிராடிஷனல் மற்றும் நவீனம் கலந்த உடையில் கவர்ச்சியாக போட்டோ சூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இப்புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.