அதெல்லாம் நிரந்தரமில்லை.! ராசியில்லா நடிகை இப்போ no 1.!பீஸ்ட் பட நடிகை கூறியதை பார்த்தீங்களா!!

அதெல்லாம் நிரந்தரமில்லை.! ராசியில்லா நடிகை இப்போ no 1.!பீஸ்ட் பட நடிகை கூறியதை பார்த்தீங்களா!!


pooja-hegde-shares-her-cinema-experience

தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்து வெளிவந்த 'முகமூடி' படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அவருக்கு தமிழில் பெரியளவில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதனால் அவர் தெலுங்கில் பல படங்களில் நடித்தார்.

 பின் பூஜா ஹெக்டே தமிழில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். மேலும் பிரபாஸுடன் ராதே ஷ்யாம் உள்ளிட்ட  ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த சில படங்கள் தோல்வியை தழுவியது. அதனால் அவர் விமர்சனத்திற்கும் ஆளானார். ஆனாலும் மனம் தளராமல் அவர் அடுத்தடுத்ததாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 

இந்நிலையில் பூஜா ஹெக்டே அண்மையில் பேட்டி ஒன்றில் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ''நான் இந்த இடத்திற்கு வர ரொம்ப உழைச்சுருக்கேன். நான் எப்போதுமே என்னை ஒரு பிரபல நடிகையாக நினைத்தது கிடையாது. தலைக்கனமும் கொண்டதில்லை. இதற்கு முன் என்னை ராசி இல்லாதவள்னு சொன்னவங்க இப்போ என்னை நம்பர் 1 நடிகை என்கிறார்கள்.

சினிமா துறையில் நட்சத்திர அந்தஸ்து எப்பொழுதும் நிரந்தரமில்லை என்பது எனக்கு நன்கு தெரியும். அதனால் நான் அதைப்பற்றி யோசிப்பது கிடையாது. சினிமாவில் சரியாக நடிக்கவில்லையென்றால் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் அவ்ளோதான் வீசி விடுவார்கள் என கூறியுள்ளார்.