சினிமா

தளபதி 65 பட பூஜையில் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணமா? உண்மையை உடைத்த நடிகை பூஜா ஹெக்டே!!

Summary:

தளபதி விஜய் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் புதிய பட

தளபதி விஜய் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். தளபதியின் 65 வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார்.

 இந்நிலையில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தின் படபூஜை விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. அதில் தளபதி விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டே கலந்து கொள்ளவில்லை.


இந்நிலையில் இதுகுறித்து பூஜா ஹெக்டே தன் சமூக வலைதள பக்கத்தில், நான் வேறொரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தேன். அதனால் என்னால் தளபதி 65 பட பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை. அது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஆனாலும் படக் குழுவுடன் இணைந்து பணியாற்ற மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கேன் என தெரிவித்துள்ளார்.


Advertisement